ஆங்கில பத்திரிகைகளில் குழு புகைப்படம் வந்தாலும், என் தனி புகைப்படம்
எப்பொழுது வரும் என்று வினவிய மிக பிரபல பதிவர் ஒருவரிடம் பேசி மிக நீண்ட இடைவெளி
ஆகிவிட்டது. நான் விமர்சனம்/பாராட்டு எழுத நினைக்கும் படத்தை எல்லாம் எழுதி
முடித்துவிட்டு லிங்க் போடும் இன்னொரு பிரபல பதிவரிடமும் பேசி நாள் ஆகிவிட்டது.
மிக நீண்ட காலமாக எழுதாமல் இருக்கும் இன்னொரு பிரபல பதிவரிடமும் பேசி நாள்
ஆகிவிட்டது. இத்தனை நாள் அப்படி என்ன தான் செய்து கொண்டிருந்தேன்? முகநூல் பக்கம்
வந்தாலும் எதுவும் பெரிதாக ஷேர் செய்யாமல் மொக்கை ஆங்கில பதிவுகளை ஏன் எழுதினேன்?
இது என் ஆகச்சிறந்த பதிவு என்று ஏன் ஆட்டோபிக்சன் எழுதினேன்?
இதற்க்கெல்லாம் பதில் தெரியாமல் தான் இந்த பதிவை எழுதுகிறேன். ஆட்டோ
பிக்சன் என்ற பெயரில் கூட்டாளிகளை திட்டினால் தான் மனம் ஆறும் என்று
சொல்லிக்கொண்டு ஏதோ உளறிக்கொண்டிருந்தேன். மீண்டும் சுய நினைவு வரும் பட்சத்தில் அல்லது
வந்த பட்சத்தில் ஒரு நல்ல பதிவு எழுத வேண்டும் என்ற அவா தோன்றியது. இப்பதிவில்
நான் எப்பொழுதும் போல் அல்லாமல் நேராக என்ன கூற விழைகிறேன் என்று யோசித்த பின்
எழுத ஆரம்பிக்க நினைத்தேன், ஆனால் வழக்கம் போல் இப்பொழுதும் அதையே சுத்தி வளைத்து,
நிமிர்த்தி மடக்கி கூறிக்கொண்டிருக்கின்றேன்.
சமீப காலமாக ப்ராஜெக்ட் என்ற பெயரில் மதிப்பெண் வேட்டை
நடந்துகொண்டிருக்கின்றது. நானும் எதை எப்படி செய்தால் எனக்கு தேவையான மதிப்பெண்ணை
அடைவது என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் அளவு தாழ்ந்துவிட்டேன். இப்பொழுது
நினைக்கும்பொழுது முதல் வருடம் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று கூறிய
ஆர்வக்கோளாறு என் கண்ணை விட்டு மறையவில்லை, சென்ற வாரம் வரை அவன் இருந்தான்
என்பதையும் கூற விழைகிறேன். இந்த வாரம் அவனது ஆர்வத்திற்கு சிறிது இடைவேளை
கொடுக்கும் பொருட்டு அவனை உறங்கச்சொல்லிவிட்டு வந்தவன் தான் இவன். அவனது ஆர்வம்,
சாதிக்க வேண்டும் என்ற மேலோங்கிய எண்ணம், அறிவுசார் பொறியியல் மற்றும் அறிவுசார் நிர்வாக
அறிவியல் ஆகியவற்றில் செய்யா வேண்டியதாக கூறியதை இவன் மறந்துவிட்டான். இவனது
எண்ணம் எல்லாம் ஒன்றே ஒன்று தான், “போட்ட காச எடுக்க வேணாமா?”, “முதலுக்கே மோசம்னா
எப்படி?”.
இவன் செய்யும் செயல்கள் எல்லாம் அவனுக்கு வருத்தம் கொடுத்தாலும், அவன்
செயலிழந்து கிடக்கின்றான். அவனது நேரம் பறிபோய் விட்டது. இனிமேல் அவனால் நிலைமையை
சீர் செய்ய முடியாது என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. அவன் பீஸ் பிடுங்கப்பட்ட
ரோபோட், இவனோ கனக்சன் கொடுக்கப் பட்ட ஜெராக்ஸ் மிஷின். இப்போது ஜெராக்ஸ் மிஷின்
தான் தேவை என்பதை உணர்ந்த அவன் இவனிடம் வேலையைக் கொடுத்து விட்டான்.
இதன் மூலம் நான் கூற விரும்பும் கருத்து “நீங்க புடுங்குறது எல்லாமே
தேவையில்லாத ஆணி தான்”.இன்னும் புரியும்படி கூற வேண்டுமானால் “நானும் சொந்த
ப்ராஜெக்ட் பண்ணல, ஆன கடையிலையும் வாங்கல”.
0 comments:
Post a Comment