முஹம்மது பின் துக்ளக், இந்த பெயரைக் கேட்டால் எல்லோருக்கும்
நினைவிற்கு வருவது “சோ” என்ற ஒரே ஒரு வார்த்தை. இந்த படத்தைப் பற்றி நானும் நிறைய
கேள்வி பட்டிருக்கிறேன், சமீபத்தில் தான் You Tubeல் முழு படம் கிடைக்கிறது அதுவரை
torrent கூட கிடைக்காமல் இருந்தது. இம்முறை நான் நன்றி கூற விரும்புவது மாடர்ன்
சினிமாஸ் மதுரையிர்க்கு, அவர்கள் புண்ணியத்தில் ஒரிஜினல் டிவிடி வாங்கி பார்க்க
முடிந்தது. அதை தவிர இந்தப் படத்தைப் பற்றி விக்கியில் தேடினால் கூட நண்பர்
சில்வியன் அவர்கள் எழுதிய பதிவு மட்டுமே என் கண்ணுக்கு எட்டியது. சோ
அவர்களைப்பற்றி பேசினாலே நினைவிற்கு வரும் துக்ளக்கைப் பார்த்த பின் தான் அதன்
பெயர்க்காரணம் புரிந்தது.
சமீபத்தில் சகுனி என்ற படத்தை விற்பனை செய்ய அது சட்டையர் ஜெனரைச்
சேர்ந்தது என்று கூறினார்கள். நான்கூட satire stall என்ற பெயரில் ஒரு வலைப்பூவை
வைத்திருக்கின்றேன். இந்த பகடி வகையைச் சேர்ந்த பல ஆங்கில படங்கள்
பார்த்திருக்கேன், அதில் Dr. Strangelove என்ற படம் எனக்கு மிகப் பிரியமான படம்,
அது போல் தமிழில் ஒரு படம் என்றும் துக்ளக்கை கூறலாம் என்பது என் எண்ணம். தயவு
செய்து கூப்ரிக் ரசிகர்கள் மற்றும் உலக சினிமா ரசிகர்கள் என்ன மிரட்ட வேண்டாம்,
நான் உலக நாயகர்களை எல்லாம் திட்ட மாட்டேன்.
படத்தின் கதை என்னவென்று விக்கி இத்தனை நேரம் கூறியிருக்கும். பகடி
என்பது சோவிற்கு கை வந்த கலை என்பதை நாம் எல்லாரும் அறிவோம், அதை ஒரு படம் முழுவதும்
பயன்படுத்தினால் என்ன செய்யலாம் என்பதே இந்த படம். இந்த பகடி இன்றைய அரசியல்
நிலைமையும் அப்படியே அச்சு அசலாக கூறுவது தான் நம் நாட்டின் நிலைமை. ஒரு
காட்சியில் நிருபர் துக்ளக்கிடம் கேட்பார், “600 வருட அரசியல் முன்னேற்றத்தை 4
நாட்களில் எப்படி தெரிந்துகொண்டீர்கள்” என்று அதற்கு துக்ளக் சொல்வார் “அது என்
மேதாவித்தனத்தை காட்டவில்லை உங்களின் முன்னேற்றம் நான்கு நாட்களில் தெரிந்து
கொள்ளும் அளவே” என்று கூறுவார். அது போல இன்றும் எழுபத்தி இரண்டில் உள்ள போல தான்
அரசியல் இருக்கின்றது என்பதற்கு இது ஒரு சான்று. தேர்தல் பிரசாரம் என்பது ஒரே ஒரு
காட்சி மட்டுமே வரும் அதில் அவர் செய்யும் பகடி இன்றைய மற்றும் அன்றைய அரசியல்
வியாதிகளை சரியாக குறிப்பது. நடிகர்கள் அரசியல் செய்வது, அரசியல் செய்து நடிகர்கள்
ஆவது, அரசியல் செய்ய நடிகர்கள் ஆவது என்று பல பரிமாணங்களை. கோணங்களை மக்களுக்கு
உணர்த்தினாலும் மக்கள் மக்களே என்பதை உணர்த்தும் படமே இப்படம். இன்னும் நம் மக்கள்
நட்சத்திரத்தை நம்புவது ஏன் என்று தெரியாவிட்டாலும் நட்சத்திர அந்தஸ்தோ,
நட்சத்திரத்தைப் பற்றி தெரிந்தாலோ பிழைத்துக்கொள்ளலாம் என்றும் பகடி செய்வார்.
நடிப்பு என்று கூறினால், இப்படித்தின் அனைவரும் நாடகத்தில்
நடித்தவர்கள் மனோரமாவைத்தவிர. அவரும் கொடுத்த கதாபாத்திரத்தில் விளையாடி இருப்பார்(அரசியலும்
விளையாட்டு தானே). மக்களின் மீது இருக்கும் பொறுப்பை உணர்த்தும் படமாக
மட்டுமல்லாமல், இது உண்மைக்கும் பகடிக்கும் உள்ள ஒற்றுமை நிலையை உணர்த்தும் மிக
முக்கியமான படமாக கருதுகிறேன். அதுவும் நேரடி அரசியல் பிதாமகர் என்று கூறப்படும்
ஒருவரையும், இன்னும் சில அரசியல் புலிகளையும் பகடி செய்திருப்பார் (அப்போதே
அரசியலில் மனிதர்களுக்கு இடம் இல்லை என்பது தெரிகிறது).
பகடி, சட்டையர் என்ற வகையறாவில் இந்த படம் மிக முக்கியமான படம். அரசியல்,
சோ, சட்டையர், டிராமா போன்றவற்றில் ஆர்வம உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய
படம். இதைப் பற்றி என் ஆங்கில வலைப்பூவில் பதிவு வரலாம்.
0 comments:
Post a Comment