கொஞ்ச நாளா நானும் கர்ணன் படத்த பத்தி எழுதனும்னு நெனச்சுட்டு
இருந்தேன், ஆனாலும் எழுத தோணல, சரி இப்ப இருக்குற ப்லோல எழுதிரலாம்னு எழுதுறேன். ரொம்ப
நாள் கழிச்சு இந்த படத்த திரும்ப பாத்தேன். முன்ன பாத்த போது யாரு நடிச்சுருந்தாங்கனு
லாம் தெரியாது. இப்ப எல்லாரையும் நல்லா தெருஞ்சுகிட்டு பாக்கும்போது படமும் நல்லாதான்
இருந்துச்சு. இந்த படத்த இப்ப நான் பாத்தத்துக்கு காரணம் நம்ம மக்கள் இப்ப குடுத்த
ஹைப் தான் காரணம். அதுவும் கொஞ்ச நாள் முன்னாடி மதன் ஜெயா டிவி ல அது பத்தி ஒரு
அலசல் எல்லாம் வேற பண்ணினார். சரி நாம பாத்தபோது நெனவில்லாம பாத்தது இப்ப தான் நாம
ஒலக படம் எல்லாம் பாக்குறோமேனு இப்ப பாத்தேன்.
படம் ஆரம்பத்துல கொஞ்ச தூக்கத்துல இருந்துட்டேன், அதனாலயோ என்னமோ
படத்துல எல்லாருமே கத்துறாங்க. மைக் வைக்க தேவையே இல்லை. சரி நாம கதைக்கு வருவோம்,
எல்லாருக்குமே கதை என்னனு தெரியும், அந்த காலத்துலேயே குந்தி தேவிக்கு
கல்யாணத்துக்கு முன்னாடி கொழந்தை பொறக்குது, ஆனா சொசைட்டில இமேஜ் போயிடும் ஏன்னா
அவங்க தான் ராஜாவோட பொண்ணு அதுனால கங்கை ஆத்துல கொழந்தைய விட்டுர்றாங்க. அதுக்கப்பரும்
அவங்களுக்கும் கல்யாணம் ஆவுது, அதுக்குள்ளே கதை நேரா பாண்டவர்ஸ், கெளரவர்ஸ்
சண்டைக்கு போகுது. இப்ப தான் அர்ஜுனா ரோல்ல இருக்குற முத்துராமன் நம்ம சிவாஜிய
அதாங்க கர்ணன கலாய்ச்சு போட்டில இருந்து வெளிய அனுப்புராறு அதுக்கு சப்போர்ட் அவரு
குரு துரோணாச்சாரியார். எப்போதுமே இந்த மாதிரி நேரத்துல தான் ஒரு கேரக்டர் என்ட்ரி
குடுப்பாரு அப்படி தான் நம்ம துரியோதனன் கேரக்டர்ல அசோகன் என்ட்ரி குடுக்குராரு.
அவருக்கு சப்போர்ட் மாமா சகுனி. அந்த சகுனி அறிவாளிங்க நம்ம கார்த்தி சகுனி
மாதிரில்லாம் இல்லை. அந்த காலத்துல எனக்கு தெரிஞ்சு இது தான் பெரிய மல்டி ஸ்டார்
படமா இருக்கும்னு நெனக்குறேன். முக்கியமான ஒரு கேரக்டர விட்டுட்டேன், அது தான்
கிருஷ்ணன், அந்த காலத்துல இந்த மாதிரி எபிக் கேரக்டர்ல ஹீரோனா அது N.T.R தான். அவரு செலக்டிவா நடிச்ச தமிழ் படங்கள்ல இதுவும் ஒண்ணு. இது
பத்தாதுன்னு தேவிகா, சாவித்ரினு நடிகைகள் வேற. இதுல யாருக்கும் நடிக்க வராதுன்னு
சொல்ற ஆட்கள் இல்லை, எல்லாருமே அப்ப அவங்களுக்குன்னு தனி ரசிர்கள் பட்டாளம்
இருந்துச்சு. அதுனால அப்பவே படத்துக்கு ஏகப்பட்ட ஹைப் இருந்துருக்கும். சரி இப்ப
பாக்கும்போது அந்த படத்துல அப்படி என்ன புதுசா தெரியுதுன்னு இனிமே தான் பாக்க
போறோம், இன்னும் புரியுற மாதிரி சொல்லனும்னா பதிவுக்குள்ள இனிமே தான் போக போறோம்.
படத்த பத்தி நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஆரம்பத்துல இருந்து எல்லாரும்
ஹை பிட்ச்ல கத்துறாங்க, பாவம் வேற எதோ காம்பெடிசன்னு நெனசுட்டங்க போல. படத்துல
எனக்கு சிவாஜிய எக்ஸ்ப்லோயட் பண்ணின மாதிரி தோணிச்சு. அவருக்கு முக்கியத்துவம்
குடுக்கணும்னு, அவரோட நடிப்பு எல்லார விடவும் தனியா தெரியணும்னு ரொம்ப நடிக்க
விட்டுருக்காங்க. அதுவும் ஒரு சில க்ளோஸ் அப் ஷாட்லாம் பாகவே பயமா இருந்துச்சு. அத
கொஞ்சம் தள்ளி வெச்சுருந்த படம் இன்னும் ரொம்ப நல்ல வந்துருக்கும்(நானும் ஒரு
பெரிய கேமரா மேன்னுல்லாம் சொல்லல அட்லீஸ்ட் பயந்து போய் இருக்கமாட்டேன்). அப்புறம்
நார்மலா பேச வேண்டிய எடத்துல எல்லாம் வெறி வந்து கத்துறது கொஞ்சம் ஓவர் ஆக்டிங்
போல இருந்துச்சு. இதெல்லாம் இருந்தா கூட படத்துல அசோகன் நல்லா நடிப்பாரு, அவர வெச்சு
காமெடி பண்ணாம நல்லாவே யூஸ் பண்ணி இருப்பாங்க, அதுவும் ஒரு சில எடத்துல அவர்
குடுக்குற ரியாக்சன் ரொம்ப நல்லா இருக்கும், அவரு மனைவி கிட்ட சிவாஜிய இன்ட்ரோ
குடுக்குற சீன், அப்புறம் போர்னு சொல்லும்போது ஏன் கிட்ட கர்ணன் இருக்கான்,(இவன்
எண்ட தளபதி) இப்படி பல சீன் நல்லா நடிச்சுருப்பாறு. வீ.எஸ். ராகவன கூட வீர வசனம்
பேச வச்சுருப்பாங்க, சும்மா அவரும் கெடச்ச கேப்ல கெடா வெட்டி இருப்பாரு. இது எல்லாத்த
விடவும் படத்துல நடிப்புன்னு எனக்கு புடிச்சது N.T.R தான்.
அவரோட இன்ட்ரோவே ரெண்டாவது பாதில தான். மனுஷன் சும்மா அந்த கேரக்டரா தான்
இருப்பாரு, சிவாஜியோட சவுண்ட் பெர்போர்மான்ஸ் முன்னாடி இவரோட சட்டில்
பெர்போர்மான்ஸ் மறைஞ்சு போச்சு, இப்ப கூட எல்லாரும் சிவாஜியோட பெர்போர்மான்ஸ்
பத்தி தான் பேசுறாங்க. அந்த கால படத்துல நான் எதிர் பார்க்காதது. சும்மா மனுஷன்
அசால்ட வேலைய பாத்துட்டு போய்ட்டே இருப்பாரு. அவரு நடிச்ச மாதிரியே தெரியல. எதார்த்தம்
எதார்த்தம்னு இப்ப நிறைய பேர் சொல்லுரத விட இருநூறு மடங்க தேவலம்.
படத்துக்கு இதெல்லாத்துக்கும் மேல பெரிய பலம்னா பாட்டு தான்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் ஒரு பாட்ட வெச்சே படத்த க்லாசிக்ஸ்னு சொல்லிறலாம். அதுவும்
அதுல தான் சிவாஜி க்ளோஸ்அப்ல பாக்க நல்லா இருப்பாரு, மேக் அப் பத்தி ஏதும் சொல்ல
முடியாதுன்னுனாலும், மத்த சீன் மாதிரி பயமா இருக்காது. N.T.R வழக்கம்போல அலட்டிக்காம வருவார். அந்த பாட்டுல அவர் தான் என்ன
பொறுத்த வரைக்கும் ஹீரோ. இரவும் பகலும் பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்சது, மத்த
எல்லா பாட்டும் பிடிக்கலன்னு சொல்ல முடியாது. மொத்தத்துல படம் பாத்தபோது ஒரு புது
எக்ஸ்பீரியன்ஸ் கெடச்சுது.
ஒரு விஷயம் நல்ல புரிஞ்சுது, குடுத்த ஹைப்புக்கு காரணம் நோஸ்டல்ஜியா.
படம் எதிர்பாத்த அளவு நல்லா இருந்துச்சா இல்லையான்னு தெரியல, ஆன செலவழிச்ச நேரத்த
வேஸ்ட்ன்னு சொல்ல முடியாது.
0 comments:
Post a Comment