Wednesday, November 28, 2012

ஒலக உணவு


சென்ற ஞாயிறு சென்னை பதிவர் குழுமம் சார்பாக முதலாமாண்டு நிறைவுக் கொண்டாட்டச் சந்திப்பு நடந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வீகெஸ் அண்ட் தாமஸ்(Veekes and Thomas) உணவகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பில் ஐரோப்பிய உணவை சுவைக்கலாம் என்ற எண்ணத்தில் காலை உணவை குறைத்துக்கொண்டு வயிற்றில் அதிக இடத்தை சேமித்து வைத்துக்கொண்டேன். சந்திப்பில் முதலில் நுழைந்தவுடன் எலுமிச்சைச் சாரு தரப்பட்டது. துவக்கி நன்றாக தான் இருந்தது, அத்துடன் அங்கு நீரில் ஏதோ ஒரு இலை போடப்பட்டு இருந்தது, பிறகு தான் அதன் பெயர் Vermilion Leaves என்று தெரியவந்தது. அது ஏதோ சுத்திகரிப்பிற்காக என்று மட்டும் எனக்கு புரிந்தது. அதன் பின் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்ததில் நேரம் சென்றது தெரியவில்லை. சில மணிநேரங்கள் சென்றவுடன் மூளைக்கு ஒய்வு கொடுத்துவிட்டு பசி தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. இதே நிலைமை தான் எல்லோருக்கும்போல் பசி தன் வேலையைக்காட்ட நேரம் தராமல் உணவிற்காக அனைவரும் உட்கார்ந்தாகிவிட்டோம். உணவிற்காக எங்கள் மேசையில் ஒரு தட்டும் முள்கரண்டியும் இருந்தது. ஐரோப்பிய உணவகம் என்பதால் துவக்கியாக ஏதேனும் தெரியாத உணவு வகை தரப்படும் என்று எண்ணி காத்திருந்தேன். உணவு வகையும் வைக்கப்பட்டது, அதைப் பார்த்தபொழுது எங்கும் பார்க்காததுபோல் தோற்றமளித்தது. சரி துவக்கி எப்படி இருந்தால் என்ன என்று முள்கரண்டியால் எடுத்து சுவைத்தேன், பின்புதான் தெரிந்தது அது காரட் பஜ்ஜி என்று. சரி என்ன இருந்தாலும் தக்காளி சாஸுடன் பஜ்ஜி சாப்பிட நன்றாகத் தான் இருந்தது என்று சாப்பிட ஆரம்பித்தேன். பஜ்ஜி இருவருக்கு ஒரு தட்டில் வைக்கப்பட்டது, அதில் தேவையானதை எடுத்துக்கொள்ள ஒரு முள்கரண்டியும் வைக்கப்பட்டிருந்தது. பஜ்ஜி வருவதற்குமுன் கட்லட் போன்றதொரு உணவு வைக்கப்பட்டிருந்தது. அதன் சுவையும் சரி பஜ்ஜியின் சுவையும் சரி மிக அருமை, என்னதான் ஐரோப்பிய உணவகத்தில் பஜ்ஜி என்ற ஏமாற்றம் இருந்தாலும் அதன் சுவை ஏமாற்றத்தை மறைத்தது.
Water with Vermilion Leaves

ஐரோப்பிய உணவகங்களில் தக்காளி சாஸின் சுவையை மட்டும் வேறு எங்கும் கொண்டுவர முடிவதில்லை, அதன்பொருட்டு எல்லா துவக்கிகளையும் நன்கு உண்டேன். இதில் என்னுடன் இருந்த நண்பர்கள் எண்ணை என்றாலே தூர ஓடும் குழுவைச் சேர்ந்தோர். அதனால் தட்டில் உள்ள எல்லா பொருட்களையும் காலி செய்யும் பொறுப்பு என்மீது விழுந்தது, இருந்தும் அதை என்னால் முழுமையாக செய்ய முடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று துவக்கியை மட்டுமே மிகையாக சாப்பிட்டால் உணவை சாப்பிட இடம் இருக்காது, இரண்டு முள்கரண்டி. முள்கரண்டியை தட்டில் வைத்துவிட்டார்கள் பெரிய பெரிய உணவகங்களில் இப்படி தான் சாப்பிட வேண்டும்போல என நானும் மிகவும் முயற்சி செய்தேன். இதை எல்லாம் இரண்டு நாற்காலி தள்ளி உட்கார்ந்திருந்த நண்பர் மட்டுமே கூர்ந்து கவனித்திருக்கிறார், அவர் சொன்னது இது தான்.” ஏன்?? வரலைன்ன கைல எடுத்த சாப்பிடவேண்டியது தான?” இதையும் மீறி எப்பாடு பட்டாவது முள்கரண்டியில் பஜ்ஜி சாப்பிடவேண்டும் என்று சபதம் எடுத்து சாப்பிட்டும் விட்டேன்.

அதன்பின் உணவு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டு வகையான உணவுகள் பரிமாறப்பட்டது, ஒன்று ஸ்பகெட்டி(Spaghetti) மற்றொன்று ரிசோட்டா(Risotta). முதலில் ஸ்பகெட்டி கொண்டுவரப்பட்டது, அதற்கும் நூடுல்சுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஒல்லியா இருந்த நூடுல்ஸ். குண்டா இருந்தா ஸ்பகெட்டி என்று அங்கு இரு ஒரு நண்பர் னே அறியாமையை போக்கினார். இருந்தும் அடுத்த உணவைப்பார்த்துவிட்டு தேர்வு செய்யலாம் என்று இருந்தேன். இரண்டாவது உணவு ரிசோட்டாவை பார்த்த பிறகு ஸ்பகெட்டியைத் தேர்ந்தெடுத்தேன். ரிசோட்டாவைப் பற்றி கூறவேண்டும் என்றால் அது அதிகம் பூண்டு போடப்பட்ட தயிர்சாதம். தயிர்சாதம் சாப்பிட ஐரோப்பிய உணவகமா என்ற உணர்வில் முந்தய உணவைத் தேர்ந்தேடுத்தேன். உலகப்படம் பிடிக்கும் என்பதால் உலக உணவும் பிடிக்கும் என்ற என் எண்ணம் தவறு என்று நான் உணர்ந்தேன். இரு உணவையும் சுவைத்து விட்டேன், என்னால் முடியவில்லை. பெலினியை எதிர்பார்த்து போனேன், கிடைத்தது வேறு ஒன்று. இது முன்னரே தெரிந்திருந்தால் இன்னும் சில பஜ்ஜிகளை உள்ளே தள்ளி இருப்பேன். இனி யோசித்து என்ன பயன் என்று நினைத்து வருந்தி கொண்டிருந்தேன். மீண்டும் மூளைக்கு வேலை கொடுத்தால் நேரம் சென்றது. இறுதியில் ஐஸ்கிரீம் வந்து உணவை முடித்து வைத்ததால் பிழைத்தேன்.
Risotta

சப்போட்டா சுவையுடன் கடைசி நேரத்தில் ஆபத்பாந்தவனாக வந்த ஐஸ்கிரீமிற்கு என்னுடைய நன்றியைச் சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன். (“இனிமே இத்தாலிய, ஐரோப்பிய ரெஸ்டாரன்ட்னு கேப்பா ?????)

புகைப்பட உபயம்: Vid Dev, Bragadeesh Prasanna.
Monday, November 19, 2012

பிரபல பதிவர்


சில நாட்களாகவே நான் பதிவெழுத தலைப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்/கொண்டிருந்தேன். இந்த வலைப்பூவிற்கு ஆர்வக்கோளாறு என்று பெயரிட்டாகிவிட்டது. பெயருக்கேற்றாற்போல் சில ஆர்வகோளாறான பதிவுகளையும் பதிந்து நானும் பிரபல பதிவர் என்று சபையில் கத்திவிட்டேன். ஆனால் கேட்பாறற்று கிடக்கும் இந்த வலைப்பூவை பிரபலமாக்குவது எப்படி என்ற கேள்விக்கு பதிலை அறிய நான் முற்பட்டபோது கண்ணில் தென்பட்ட சில செய்திகள் என்னை திரும்பி பார்க்க வைத்துவிட்டன. இன்னும் புரியும்படியாக சொல்லப்போனால் நான் எதற்காக எழுத நினைக்கின்றேன், பலர் எதற்காக எழுதுகின்றனர், இன்னும் சில பல விஷயங்கள் தீர்கமாக புரிந்தது. இப்பொழு நான் என்ன கூற வருகின்றேன் என்று உங்களுக்கு புரியவில்லை என்று எனக்கு மிகத்தெளிவாக புரிகின்றது ஏனெனில் நான் என்ன கூற வருகின்றேன் என்று எனக்கே புரியவில்லை. எனக்கே புரியாத ஒன்றை உங்களுக்கு புரியவைத்துவிட்டால் நான் மாமேதை. அப்படி நான் கூறுவது உங்களுக்கு புரியவில்லை என்றால் நான் மேதை. இது நான் கண்ட விஷயங்களில் முக்கியமான ஒன்று. மற்றொன்று இசங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பது. வாழ்வில் முக்கியமோ இல்லையோ பதிவில் முக்கியம், இந்த இசங்களில் நாம் பேசப்போகும் இசத்தைப் பற்றி நன்கு தெரிந்தார்ப்போல பேச வேண்டும். இசங்களில் முதன்மையாக பேசப்படும் இசம் பெமினிசம் மற்ற சில இசங்களும் உண்டு அவை எக்ஸிஸ்டன்சியலிசம், சர்ரியலிசம், மேஜிகல் ரியலிசம் இன்ன பல. இல்லை இவையெல்லாம் அதிக வேலை அதனால் இவற்றைப்பற்றி கூகிள் செய்ய முடியவில்லை என்றால் ஈயவாதி ஆகிவிடுங்கள். காந்தியவாதி, பெண்ணியம், இன்னும் பல ஈயம் உள்ளன. அதில் ஒரு ஈயத்தை பயன்படுத்தலாம்.

அடுத்தது உங்கள் ஆதர்ஷ நாயகனை தேர்ந்தெடுக்கவும், சொம்படிக்கவும் மன்னிக்கவும் அவர் புகழைப் பாடிப் பரிசில் பெறவும் என்று சொல்ல வந்தேன். பிறகு அந்த ஆதர்ஷ நாயகனுடன் போட்டோ எடுத்துக்கொள்ளவும் அதை ப்ரோபைல் படமாக போடவும். அவரின் எதிரி இனி உங்களின் எதிரி விரைவில் நீங்கள் அவரின் கையாளாக(இல்லை இல்லை கைக்கு எட்டும் தூரத்தில் வர வாய்ப்புண்டு என்று சொல்ல வந்தேன்). அதன் பின் நீங்கள் ஒரு புத்தகம் கூட பிரசுரிக்க வாய்ப்புண்டு. இதன் மூலம் நீங்கள் பதிவராக மட்டும் அல்ல பிரபல பதிவராக வாய்ப்புண்டு. நீங்கள் மிக குறுகிய காலத்தில் அதி பிரபல பதிவர் ஆகவேண்டுமென்றால், மேல சொன்ன அனைத்தையும் மிக சிரமப்பட்டு செய்ய வேண்டாம். மிக சுலபமான ஒரு வழி இருக்கிறது ஆனால் அதில் செல்ல உங்களுக்கு மன தைரியம், தடைக்கற்களைத் தாண்டி பயணம் செய்யும் திறன் விடாமுயற்சி, இதற்க்கு எல்லாம் மேல் நடிப்பு திறன், கண்ணீர் விடும் திறன், ஒன்றுமே செய்யாமல் அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொள்ளும் திறன் இதெல்லாம் தேவை. நாட்டு நடப்பு பற்றி ஆழ்ந்த அறிவும் தேவை.

இவை எல்லாம் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான், திட்ட வேண்டும், நன்றாக திட்ட வேண்டும் ஒரு பெரிய பிரபலத்தை திட்ட வேண்டும், அவர் திரும்பி பார்க்கும்வரை திட்ட வேண்டும். அவர் பார்க்காவிட்டால் அவரைப் பார்க்கவைத்து திட்ட வேண்டும். ஜெயிலில் பிடித்து போட்டால் அழ வேண்டும், தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க வேண்டும். நியாயம் கேட்க வேண்டும். இவை தான் நான் தேடித் திரிந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த சில அறிய பொக்கிஷங்கள். இவை எல்லாவற்றையும் நான் பயன்படுத்தாமல் ஏன் இங்கு பதிவிட்டு எல்லோருக்கும் தருகிறேன்???

“நான் நல்லவங்க”,”எனக்கு நடிக்க தெரியாதுங்க”.

Wednesday, November 7, 2012

கர்ணன் – மீண்டு வந்து ஒரு பார்வை



கொஞ்ச நாளா நானும் கர்ணன் படத்த பத்தி எழுதனும்னு நெனச்சுட்டு இருந்தேன், ஆனாலும் எழுத தோணல, சரி இப்ப இருக்குற ப்லோல எழுதிரலாம்னு எழுதுறேன். ரொம்ப நாள் கழிச்சு இந்த படத்த திரும்ப பாத்தேன். முன்ன பாத்த போது யாரு நடிச்சுருந்தாங்கனு லாம் தெரியாது. இப்ப எல்லாரையும் நல்லா தெருஞ்சுகிட்டு பாக்கும்போது படமும் நல்லாதான் இருந்துச்சு. இந்த படத்த இப்ப நான் பாத்தத்துக்கு காரணம் நம்ம மக்கள் இப்ப குடுத்த ஹைப் தான் காரணம். அதுவும் கொஞ்ச நாள் முன்னாடி மதன் ஜெயா டிவி ல அது பத்தி ஒரு அலசல் எல்லாம் வேற பண்ணினார். சரி நாம பாத்தபோது நெனவில்லாம பாத்தது இப்ப தான் நாம ஒலக படம் எல்லாம் பாக்குறோமேனு இப்ப பாத்தேன்.

படம் ஆரம்பத்துல கொஞ்ச தூக்கத்துல இருந்துட்டேன், அதனாலயோ என்னமோ படத்துல எல்லாருமே கத்துறாங்க. மைக் வைக்க தேவையே இல்லை. சரி நாம கதைக்கு வருவோம், எல்லாருக்குமே கதை என்னனு தெரியும், அந்த காலத்துலேயே குந்தி தேவிக்கு கல்யாணத்துக்கு முன்னாடி கொழந்தை பொறக்குது, ஆனா சொசைட்டில இமேஜ் போயிடும் ஏன்னா அவங்க தான் ராஜாவோட பொண்ணு அதுனால கங்கை ஆத்துல கொழந்தைய விட்டுர்றாங்க. அதுக்கப்பரும் அவங்களுக்கும் கல்யாணம் ஆவுது, அதுக்குள்ளே கதை நேரா பாண்டவர்ஸ், கெளரவர்ஸ் சண்டைக்கு போகுது. இப்ப தான் அர்ஜுனா ரோல்ல இருக்குற முத்துராமன் நம்ம சிவாஜிய அதாங்க கர்ணன கலாய்ச்சு போட்டில இருந்து வெளிய அனுப்புராறு அதுக்கு சப்போர்ட் அவரு குரு துரோணாச்சாரியார். எப்போதுமே இந்த மாதிரி நேரத்துல தான் ஒரு கேரக்டர் என்ட்ரி குடுப்பாரு அப்படி தான் நம்ம துரியோதனன் கேரக்டர்ல அசோகன் என்ட்ரி குடுக்குராரு. அவருக்கு சப்போர்ட் மாமா சகுனி. அந்த சகுனி அறிவாளிங்க நம்ம கார்த்தி சகுனி மாதிரில்லாம் இல்லை. அந்த காலத்துல எனக்கு தெரிஞ்சு இது தான் பெரிய மல்டி ஸ்டார் படமா இருக்கும்னு நெனக்குறேன். முக்கியமான ஒரு கேரக்டர விட்டுட்டேன், அது தான் கிருஷ்ணன், அந்த காலத்துல இந்த மாதிரி எபிக் கேரக்டர்ல ஹீரோனா அது N.T.R தான். அவரு செலக்டிவா நடிச்ச தமிழ் படங்கள்ல இதுவும் ஒண்ணு. இது பத்தாதுன்னு தேவிகா, சாவித்ரினு நடிகைகள் வேற. இதுல யாருக்கும் நடிக்க வராதுன்னு சொல்ற ஆட்கள் இல்லை, எல்லாருமே அப்ப அவங்களுக்குன்னு தனி ரசிர்கள் பட்டாளம் இருந்துச்சு. அதுனால அப்பவே படத்துக்கு ஏகப்பட்ட ஹைப் இருந்துருக்கும். சரி இப்ப பாக்கும்போது அந்த படத்துல அப்படி என்ன புதுசா தெரியுதுன்னு இனிமே தான் பாக்க போறோம், இன்னும் புரியுற மாதிரி சொல்லனும்னா பதிவுக்குள்ள இனிமே தான் போக போறோம்.

படத்த பத்தி நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஆரம்பத்துல இருந்து எல்லாரும் ஹை பிட்ச்ல கத்துறாங்க, பாவம் வேற எதோ காம்பெடிசன்னு நெனசுட்டங்க போல. படத்துல எனக்கு சிவாஜிய எக்ஸ்ப்லோயட் பண்ணின மாதிரி தோணிச்சு. அவருக்கு முக்கியத்துவம் குடுக்கணும்னு, அவரோட நடிப்பு எல்லார விடவும் தனியா தெரியணும்னு ரொம்ப நடிக்க விட்டுருக்காங்க. அதுவும் ஒரு சில க்ளோஸ் அப் ஷாட்லாம் பாகவே பயமா இருந்துச்சு. அத கொஞ்சம் தள்ளி வெச்சுருந்த படம் இன்னும் ரொம்ப நல்ல வந்துருக்கும்(நானும் ஒரு பெரிய கேமரா மேன்னுல்லாம் சொல்லல அட்லீஸ்ட் பயந்து போய் இருக்கமாட்டேன்). அப்புறம் நார்மலா பேச வேண்டிய எடத்துல எல்லாம் வெறி வந்து கத்துறது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போல இருந்துச்சு. இதெல்லாம் இருந்தா கூட படத்துல அசோகன் நல்லா நடிப்பாரு, அவர வெச்சு காமெடி பண்ணாம நல்லாவே யூஸ் பண்ணி இருப்பாங்க, அதுவும் ஒரு சில எடத்துல அவர் குடுக்குற ரியாக்சன் ரொம்ப நல்லா இருக்கும், அவரு மனைவி கிட்ட சிவாஜிய இன்ட்ரோ குடுக்குற சீன், அப்புறம் போர்னு சொல்லும்போது ஏன் கிட்ட கர்ணன் இருக்கான்,(இவன் எண்ட தளபதி) இப்படி பல சீன் நல்லா நடிச்சுருப்பாறு. வீ.எஸ். ராகவன கூட வீர வசனம் பேச வச்சுருப்பாங்க, சும்மா அவரும் கெடச்ச கேப்ல கெடா வெட்டி இருப்பாரு. இது எல்லாத்த விடவும் படத்துல நடிப்புன்னு எனக்கு புடிச்சது N.T.R தான். அவரோட இன்ட்ரோவே ரெண்டாவது பாதில தான். மனுஷன் சும்மா அந்த கேரக்டரா தான் இருப்பாரு, சிவாஜியோட சவுண்ட் பெர்போர்மான்ஸ் முன்னாடி இவரோட சட்டில் பெர்போர்மான்ஸ் மறைஞ்சு போச்சு, இப்ப கூட எல்லாரும் சிவாஜியோட பெர்போர்மான்ஸ் பத்தி தான் பேசுறாங்க. அந்த கால படத்துல நான் எதிர் பார்க்காதது. சும்மா மனுஷன் அசால்ட வேலைய பாத்துட்டு போய்ட்டே இருப்பாரு. அவரு நடிச்ச மாதிரியே தெரியல. எதார்த்தம் எதார்த்தம்னு இப்ப நிறைய பேர் சொல்லுரத விட இருநூறு மடங்க தேவலம்.

படத்துக்கு இதெல்லாத்துக்கும் மேல பெரிய பலம்னா பாட்டு தான். உள்ளத்தில் நல்ல உள்ளம் ஒரு பாட்ட வெச்சே படத்த க்லாசிக்ஸ்னு சொல்லிறலாம். அதுவும் அதுல தான் சிவாஜி க்ளோஸ்அப்ல பாக்க நல்லா இருப்பாரு, மேக் அப் பத்தி ஏதும் சொல்ல முடியாதுன்னுனாலும், மத்த சீன் மாதிரி பயமா இருக்காது. N.T.R வழக்கம்போல அலட்டிக்காம வருவார். அந்த பாட்டுல அவர் தான் என்ன பொறுத்த வரைக்கும் ஹீரோ. இரவும் பகலும் பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்சது, மத்த எல்லா பாட்டும் பிடிக்கலன்னு சொல்ல முடியாது. மொத்தத்துல படம் பாத்தபோது ஒரு புது எக்ஸ்பீரியன்ஸ் கெடச்சுது.

ஒரு விஷயம் நல்ல புரிஞ்சுது, குடுத்த ஹைப்புக்கு காரணம் நோஸ்டல்ஜியா. படம் எதிர்பாத்த அளவு நல்லா இருந்துச்சா இல்லையான்னு தெரியல, ஆன செலவழிச்ச நேரத்த வேஸ்ட்ன்னு சொல்ல முடியாது. 
Thursday, November 1, 2012

வாங்க கருத்து சொல்லலாம்



அ,ஆ,இ,ஈ னு நாலு பேரு இருந்தாங்களாம், இதுல ‘அ’ ரொம்ப நாளா கேட்பாரற்று இருந்தாராம், ஆன ‘ஆ’ வோ ரொம்பவே பிரபலமா இருந்தாராம். இந்த நேரத்துல, இந்த நாலு பேருக்குமே சம்பந்தம் இல்லாம ஒரு பிரச்சனை நடந்துச்சாம். இந்த பிரச்சனை நடக்கும்போது ரொம்பவே பிரபலமா இருந்த காரணத்தால ‘ஆ’ ஒரு கருத்து சொன்னாராம், இப்ப ‘அ’ வுக்கு ஒரு யோசனை தோணிச்சாம், இது தான் சமயம்னு நெனச்சு ‘அ’ என்ன சொன்னாரோ அதுக்கு நேர்மாற ஒரு கருத்து சொன்னோம்னா நாமளும் பிரபலம் ஆகலாம்னு எண்ணி, ஒரு கருத்து சொன்னாராம். அது வரைக்கும் அவர கண்டுக்காதவங்க எல்லாம் அவரைப் புடிச்சு திட்ட ஆரம்பிச்சாங்க. இப்ப அவருக்கும் அந்த ‘ஆ’ வுக்கும் சண்டை வர ஆரம்பிச்சுருச்சு. ‘அ’ பாவம் என்ன பண்ணுவாரு, இந்த சண்டை ஆரம்பிச்சது என்னவோ ‘அ’ வோட அபிமானிகள் தான் அதுனால அவரால யாரையும் (‘ஆ’ வ தவிர) திட்ட முடியல, மத்தவங்கள திட்டினா அவரோட பிரபலம் ஸ்டேடஸ் போயிடுமே னு ‘ஆ’ வ திட்ட ஆரம்பிச்சார். சண்டையும் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு.
இப்ப இது தான் சமயம் னு ‘இ’, ’ஈ’ னு ரெண்டு பேரு ஆளுக்கொரு சைடு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க. ‘அ’ வும் ‘ஆ’ வும் சண்டைய நிப்பாட்ட நினைக்குற இந்த நேரத்துல தான் இவங்க ரெண்டு பெரும் கதைக்குள்ள வராங்க. இப்ப கதை வேற மாதிரி போகுது, இங்க தான் கதைல ட்விஸ்ட் வருது. நாலு பேரு இந்த பிரச்சனை பத்தி கருது சொன்னதால இது ரொம்ப பெரிய பிரச்சனையா பேச ஆரம்பிச்சுட்டாங்க. அடுத்து இப்ப இந்த பிரச்சனைய பத்தி கருது சொல்லலைன்ன பிரபலம் ஸ்டேடஸ் போய்டும், அப்புறம் பொது அறிவு இல்லன்னு சொல்லிடுவாங்க அதனால ஆளாளுக்கு கருத்து சொல்ற நேரம் வந்துருச்சு.
இப்ப இதுல என்ன ட்விஸ்ட்னு பாத்தா பல பேருக்கு யாரை சப்போர்ட் பண்ணனு தெரில, அத விட கொடுமை என்ன பிரச்சனை நடுக்குதுன்னே தெரில. அதால இப்ப யாரு என்ன கருத்து சொல்லிருக்காங்கனு பாக்க ஆரம்பிச்சா அதுல நமக்கு வேண்டாதவங்கனு ஒரு சில பேரு இருப்பாங்க, அவங்க என்ன சொல்லிருக்காங்களோ அதுக்கு மாற்றா சொல்லிறலாம். நாமளும் கருத்து சொல்லியாச்சு, அதால நாமளும் பிரபலம்னு சொல்லியாச்சு. சரி பிரபலம்னா இவளோ ஈசியான விஷயமா? அது தான் இல்லை, இப்ப ரெண்டு பேரு உங்களுக்கு பிடிக்காதவங்க வேற வேற மாற்று கருத்து சொல்லி இருக்காங்கனு வெச்சுக்குவோம், அப்ப யாரை திட்டுரதுன்னு ஒரு பெரிய கேள்வி வரும் அப்ப தான் உங்க அறிவுக்கு தீனி போடறதே. இப்ப பிரச்சனைய திசை திருப்பணும், மொத்தமா நீங்க நினைக்குற திசைல திசை திருப்பனும். திருப்பினதுக்கு அப்புறம் எல்லாரும் இப்ப வேற கருத்து சொல்லுவாங்க, இப்ப உங்களோட எதிரி(அப்படின்னும் சொல்லலாம்) என்ன கருத்து சொல்றாரோ அதுக்கு மாற்றா சொல்லணும்.
இது எல்லாத்துக்கும் மேல என்னன்னா பிரச்சனை பிரச்சனைனு சொல்லிட்டு இருக்கோமே அவங்களுக்கே பிரச்சனை மரக்குற மாதிரி இருக்குற நேரத்துல தான் நல்லா கெளப்பி விடணும் இல்லைனா நாம கருத்து சொல்ல முடியாது.
இப்படி கருத்து சொல்லி என்ன நடக்க போகுது, ஏன் நாம கருத்து சொல்லணும் இப்படி பல கேள்விகள் இருக்கும். இதுக்கெல்லாம் பதில் சொல்லனும்னு நீங்க கேட்டிங்கன்னா அதுக்கு ஒரு பத்து பேரு கருத்து சொல்லுவாங்க அத கேக்க நீங்க ரெடின்னா முகநூல்ல உங்க கருத்த பதிவு பண்ணுங்க.
Saturday, October 27, 2012

GRE


GRE:

ஜீ ஆர்  ஈ, இப்படி ஒரு தேர்வு இருப்பதே எனக்கு சமீபத்தில் தான் தெரியும். இந்த தேர்வைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டதெல்லாம் மேற்படிப்புக்கு ஐக்கிய அமெரிக்காவிற்கு செல்ல நினைப்போரிடம்தான். நானும் ஐக்கிய அமெரிக்காவிற்கு (புரியுது இனிமே USஎன்றே சொல்றேன்) மேற்படிப்புக்கு செல்லலாம் என்ற எண்ணத்தில் எழுத முயன்றேன், அந்த கதையைய் பிறகு நாம் பார்க்கலாம். முதலில் இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது இந்த தேர்வு என்ன, இதன் மூலம் என்ன நன்மைகள் நடக்கிறது.

முதலில் இந்த தேர்வை நடத்தும் நிறுவனம் ETS. இதைப்பற்றி நாம் சிறிது பார்த்துவிட்டு பிறகு தேர்வைப்பற்றி நாம் பார்க்கலாம்.

Educational Testing Service (ETS), founded in 1947, is the world's largest private nonprofit educational testing and assessment organization. It is presently headquartered near Princeton, New Jersey.
ETS develops various standardized tests primarily in the United States for K–12 and higher education, and it also administers international tests including the TOEFL (Test of English as a Foreign Language), TOEIC (Test of English for International Communication), GRE (Graduate Record Examinations) General and Subject Tests, and The Praxis test Series — in more than 180 countries, and at over 9,000 locations worldwide. Many of the assessments it develops are associated with entry to US tertiary (undergraduate) and quaternary education (graduate) institutions, but it also develops K–12 statewide assessments used for accountability testing in many states, including California, Texas, Tennessee and Virginia. In total, ETS annually administers 20 million exams in the U.S. and in 180 other countries.

இது தான் இந்த தேர்வை நடத்தும் இ டி எஸ் நிறுவனம் பற்றி விக்கி கூறுவது. இதில் எனக்கு உறுத்துவது என்னவென்றால் இந்த nonprofit என்ற வார்த்தை தான். இவர்களின் கணக்கு மிக அபாரமானது, தேர்வை எழுத $175 ருபாய் இந்திய மதிப்பில் சுமார் பத்தாயிரம் ரூபாய் மற்றும் உங்களுக்கு பிடித்த கல்லூரிக்கு உங்கள் மதிப்பெண்ணை அனுப்ப கல்லூரிக்கு ஐநூறு முதல் ஆயிரம் ரூபாய். இது மட்டுமல்லாது உங்களுடைய மொத்த குறிப்பையும் குடுத்து விடுகிறார்கள். இப்பொழுது எல்லா கல்லூரிகளும் (அமெரிக்க மற்றும் கனடா கல்லூரிகள் மட்டும் முதன்மையாய் எற்றுக்கொள்கின்றன, ஐரோப்பிய கல்லூரிகளும் இன்ன பிற கல்லூரிகளும் இத்தேர்வை ஏற்றுக்கொள்வதில்லை) இத்தேர்வை அத்தியவசியமாக்கியது கூட ஒரு தொழில் நிலை திட்டம் தான் என்று எண்ண வைக்கிறது. அப்படி எண்ண பிரச்சனை இதில் என்று கேட்கிறீர்களா? இந்த தேர்வுக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? அப்படி எண்ண இருக்கிறது? ஏன் இந்த தேர்வை எல்லா கல்லூரிகளும் ஏற்கின்றன ? அப்படி எல்லா கல்லூரிகளும் ஏற்கும் அளவுக்கு தரமானதா இந்த தேர்வு? இவ்வாறு பல கேள்விகள் மனதில் எழுகின்றன. முதலில் இருந்தே நான் கோர வந்ததை விடுத்து பாதை மாறி கூறிக்கொண்டிருப்பது போல் இருப்பதால் இனி ஒவ்வொரு கேள்வியாக நாம் பார்ப்போம்.

ஏன் இந்த தேர்வு?
இந்த தேர்வை எல்லாரும் ஆதரிப்பதன் காரணம் என்ன. முதலில் இந்த அளவிடும் திறன் என்ன? இப்போது நான் GRE என்னும் ஒரு தேர்வை மட்டும் எடுத்துகொள்கிறேன், இதே போல் ஒவ்வொரு தேர்வுக்கும் ஒவ்வொரு காரணம் கூறலாம் என்றாலும், நான் இந்த தேர்வுக்கு எழுத முயன்றதால் இதையே எடுத்துக்கொண்டு விளக்க விரும்புகிறேன். இந்த தேர்வில் அவர்கள் அளவிட முயல்வது அரை மணி நேரத்தில் எவ்வளவு பெரிதாக உன்னால் கட்டுரை எழுத முடியும், அரை மணி நேரத்தில் எப்படி நக்கீரனாக முடியும்(அது தான் குற்றம் கண்டுபிடித்தே மார்க் வாங்கும் மக்களும் இருக்கிறார்கள்), அரை மணி நேரத்தில் எப்படி வார்த்தைகளை ஞாபகம் வைத்து அதன் பொருளை அறிய முடியும், அந்த வார்த்தைகளுக்கு ஒத்த வார்த்தைகளை அறிய முடியும், மற்றும் எந்த இடத்தில எந்த வார்த்தைகளை போட்டால் அவர்கள் எதிர்பார்க்கும் அர்த்தம் வரும் என்பதோடுநான்கு மணி நேரம் தூங்காமல் பதிலளிக்க முடியுமா மற்றும் பள்ளி மாணவர்களின் கணக்கை மறக்காமல் போடா முடியுமா? என்பதைத்தான் அளவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் கூறுவது என்ன என்பதை அவர்கள் தளத்திலேயே நீங்கள் சென்று காணலாம்.(இருந்தாலும் கூறுகிறேன் measuring the Logical ability, mathematical ability and verbal ability என்று கூறுகிறார்கள்.) இதன் மூலம் மேலே கூறிய மூன்று கூறுகளையும் அளவிடுவதாகவும், அவைதான் மேற்படிப்பிற்கு அவசியம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இவை அவசியமான கூறுகள் தான் அதற்கு மறு பேச்சு இல்லை, ஆனால் அதை இவர்கள் சரியாக அளவிடுகிறார்களா என்பது தான் கேள்வி. இத்தேர்வை அவசியமாகிய பின் இதை இவர்கள் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இந்த கேள்வி எல்லா தேர்வுக்கும் பொருந்தும் என்றாலும், இத்தேர்விற்காக நாம் செலவிடுவது அதிகம். பணம் மட்டும் செலவு அல்ல, நேரம், அறிவு, இன்ன பல.

ஏன் இந்த தேர்வை எல்ல கல்லூரிகளும் ஏற்கின்றன ?
அமெரிக்க நிறுவனம் நடத்தும் தேர்வு என்று ஒரு சாரர் கூறிக்கொண்டிருந்தாலும்(அது என்னமோ உண்மை தான்) இதற்க்கு இணையாக வேறு ஒரு தேர்வும் இல்லை, போட்டி இல்லாததாலோ என்னமோ இதை எல்லா கல்லூரிகளும் ஏற்றுக்கொள்கின்றன (TOEFLகு போட்டியாக IELTS தேர்வு இருப்பதால் பலரும் இரண்டையும் ஏற்கிறார்கள்). அதனால் போட்டியிலாமல் தேர்வான தேர்வு.

இப்போது என்ன பிரச்சனை தான் உனக்கு?
என்னுடைய பிரச்சனை என்னவென்றால், நாம் பணம் கொடுக்கின்றோம், தேர்வு எழுதுகின்றோம் மதிப்பெண் கிடைக்கின்றது தேர்வின் தகுதி இவ்வளவு தான் என்றும் தெரிந்து விட்டது அதைத் தான் உலகும் ஏற்கிறது பின் ஏன் இந்த புலம்பல், இதில் ஒன்றும் பெரிய குற்றம் ஒன்றும் இல்லையே என்று கேட்டல், இந்த பிரச்சனையை இன்கோடு நிற்கவில்லை, நீங்கள் எழுதும் தேர்வில் தான் அவர்களின் தந்திர வேலை அடங்கி இருக்கின்றது. தேர்வு எழுதும்பொழுது experimental Section & Research Section என்றோ சில பாகங்களை வைத்து உங்களை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்கள். அதாவது நீங்கள் சொந்த செலவில் ஆராய்ச்சி எலி ஆகிறீர்கள்.(சொந்த செலவில் சூனியம் என்றும் சொல்லலாம்) இப்படி உங்கள் செலவில், உங்களை சுரண்டும் நிறுவனத்திற்கு லாபமில்ல நிறுவனம் என்று கூறுவதை ஏற்க முடியுமா ? நாம் எழுதிய தேர்வின் மதிப்பெண்களை அனுப்பக்கூட கிட்ட தட்ட ஆயிரம் ருபாய், நம்மையே வைத்து விளையாடுவது, நம் எல்லா விவரங்களை விற்பதொடு மட்டுமல்லாமல், நமக்கு கல்லூரி ஆலோசனை கொடுக்கிறேன் பேர்வழி என்று நமக்கு சொல்ல கல்லூரியிடமும் காசு வாங்கும் இந்த நிறுவனம் லாபமில்ல நிறுவனமா?

இவ்வளவு கூறியும் இந்த தேர்வை எல்லோரும், நான் உட்பட எழுதத் தான் போகிறோம். ஆனால் அதன் வியாபார நோக்கில் செயல்படும் ஒரு சில செயல்களில் இருந்தாவது நாம் தப்பிக்க முனைய வேண்டும் என்பதே என் எண்ணம்.

டிஸ்கி: GRE எழுதும் நண்பர்கள் பாஸ்போர்ட் எடுத்துகொண்டு போகவும்.