இது என் நண்பனுக்காக எழுதிய பதிவு.
பாவம் பயபுள்ள நொந்து போய்ருக்கான். நானும் அவனும் ரெண்டு வாரத்துக்கு முன்ன ஸ்கைவாக்ல
படத்துக்குப் போனோம், அவனும் ரொம்ப காலமா என்ன பாக்கணும் பாக்கணும்னு நெனச்சும் முடியல,
அவன் மதுரைல இருக்கும்போது நான் சென்னைல இருந்தேன், நான் மதுரைல இருக்கும்போது அவன்
மும்பை கெளம்பிட்டான். இப்படி பல தடவ தப்பி ஒரு வழியா பாத்து, நலம் விசாரிச்சு எல்லா வேலையும்
முடிச்சு படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணினா அவரு டேமேஜரும் (மன்னிக்கணும் மேனேஜர்)
படத்துக்கு வரேன்னு சொல்லிட்டாரு. சோறும் சம்பளமும் தான நமக்கு முக்கியம்னு அவர நேர
தியேட்டருக்கு வர சொல்லிட்டு நாங்க ரெண்டு பேரும் தாம்பரம்ல இருந்து கெளம்பினோம். ஸ்டேஷன்ல
நிக்கும்போது நண்பருக்கு முதல் போன் வந்துச்சு, அவரொட இன்னொரு நண்பர் பேசினார். இவர்
அளித்த பதில் மட்டும் தான் எனக்கு கேட்டுச்சு.
என் நண்பர்: ஆமாண்டா வென்று, அதுக்கென்னா
? அவிங்களுக்கு வேற வேல இல்லை அதுக்காக என்ன பண்ண சொல்ற ? அவிங்க டாப்படிக்குற
எடத்துக்குல்லாம் வெள்ளன போகமுடியாது. சரி நான் அப்புறம் பேசுறேன்.
இவர் இப்படி பேசி முடிக்கும்போது,
பின்னாடி ரெண்டு பேரு நண்பர் மதுரை வழக்குல பேசினத வெச்சி கலாய்ச்சுட்டே வந்தாங்க,
அவரும் பொறுமையா போய்ட்டே இருந்தாரு. எனக்கு செம்ம கடுப்பு, என்ன மாப்ள அமைதியா வர
? இவிய்ங்களை எல்லாம் மெரட்டுனா தான் அடங்குவாய்ங்கன்னு சொன்னேன் ஆனா அவரோ விட்றா இன்னும்
மூணு ஸ்டேஷன்ல எறங்கிருவோம் எதுக்கு வெட்டி வேலை என்றார். அவரு கொஞ்சம் அடி உதை ஆளு,
அவரு இப்படி சொன்னது எனக்கு ஷாக்காடிச்சாப்புல தான் இருந்துச்சு.
என்னடா ஆச்சு உனக்கு? நீ இவ்வளவு
அமைதியாலாம் இருக்க மாட்டியேன்னு எறங்குனதும் கேட்டேன். அவரு அமைதியா மச்சி நீ இன்னும்
வேலைல சேரலைல அதான் பொங்குற. இவனாச்சும் பத்து நிமிஷத்துல போறவன் ஆபீசுல எனக்கு பல
பேரு. ஒருத்தன் மதுரைக்காரன்னு என் தமிழத் திட்டுவான், இன்னொருத்தனுக்கு இங்லீஷ் வராது
அதால என்ன பீட்டருன்னு ஓட்டுவான். இவனுங்களுக்குலாம் பதில் சொன்னா எனர்ஜி வேஸ்ட் மச்சி.
இவனுங்களால என்ன பண்ண முடியும் சொல்லு? எரிச்சலாவாதான்னு கேட்டா ஆவும் ஆனா அதுவே கொஞ்ச
நாள் கழிச்சு அவிங்க மேல பரிதாபமா மாறிடும். கையாலாகாத பயலுகளையெல்லாம் மதிச்சு நேரத்தை
வீணடிக்க கூடாதுடா. இவன திட்ட ஆரம்பிச்சு நாம கூட நாளைக்கு இவன மாதிரியே ஆகிருவோம்,
அப்புறம் நம்மால ஒலகத்துல நல்லதையே பாக்க முடியாது, கண்ணுக்கு கெட்டது மட்டும் தான்
தெரியும். இந்த மாதிரி ஆட்களைப் பாத்து சிரிச்சுட்டுப் போய்ட்டே இருக்கணும்னு சொல்லி
முடிச்சான். அதுக்கப்புறம் எனக்கு பல விஷயம், பல மனிதர்கள் கண்ணுக்கு முன்னாடி வந்துட்டு
போனாங்க. முக்கியமா நம்ம வாத்தியார் பாட்டு ஒண்ணு நெனவுக்கு வந்துச்சு.